கமழ்குரல் துழாய்
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்தமண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்துநால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லெனஉண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணிவண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்அலங்கற் செல்வன் சேவடி பரவிநெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயரமணிநிற மையிருள் அகல நிலாவிரிபுகோடுகூடு மதியம் இயல்உற் றாங்குத்துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்(டு)ஆண்கடன் நிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்புகருவி வானம் தண்தளி தலைஇயவடதெற்கு விலங்கி விலகுதலைத்(து) எழிலியபனிவார் விண்டு விறல்வரை அற்றேகடவுள் அஞ்சி வானத்(து) இழைத்ததூங்(கு)எயில் கதவம் காவல் கொண்டஎழூஉநிவந்(து) அன்ன பரேர்எறுழ் முழவுத்தோள்வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்துவண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்துவண்டன் அனையைமன் நீயே வண்டுபடஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்குழைக்குவிளக்(கு) ஆகிய அவ்வாங்(கு) உந்திவிசும்புவழங்கு மகளிர் உள்ளும் சிறந்தசெம்மீன் அனையள்நின் தொல்நகர்ச் செல்விநிலன்அதிர்(பு) இரங்கல ஆகி வலன்ஏர்புவியன்பணை முழங்கும் வேல்மூ(சு) அழுவத்(து)அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்ஒடுங்காத் தெவ்வர் ஊக்(கு)அறக் கடைஇப்புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்நகைவர்க்(கு) அரணம் ஆகிப் பகைவர்க்குச்சூர்நிகழ்ந் தற்றுநின் தானைபோர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு