பாடல் 26 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 26 · காடுறு கடுநெறி

தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவாகளி(று)ஆ டியபுலம் நாஞ்சில் ஆடாமத்(து)உர றியமனை இன்னியம் இமிழாஆங்குப், பண்டுநற்(கு) அறியுநர் செழுவளம் நினைப்பின்நோகோ யானே நோதக வருமேபெயல்மழை புரவின்(று) ஆகிவெய்(து) உற்றுவலம்இன்(று) அம்ம காலையது பண்(பு)எனக்கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூமெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்பீர்இவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்கா(டு)உறு கடுநெறி யாக மன்னியமுரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்உரும்பில் கூற்றத்(து) அன்னநின்திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.
பகிர்
கதை

காடுறு கடுநெறி

மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு