பாடல் 24 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 24 · சீர்கால் வெள்ளி

நெடுவயின் ஒளிறு மின்னுப்பரந்(து) ஆங்குப்புலிஉறை கழித்த புலவுவாய் எஃகம்ஏவல் ஆடவர் வலன்உயர்த்(து) ஏந்திஆர்அரண் கடந்த தார்அரும் தகைப்பின்பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்ஈதல் ஏற்றல்என்(று) ஆறுபுரிந்(து) ஒழுகும்அறம்புரி அந்தணர் வழிமொழிந்(து) ஒழுகிஞாலம் நின்வழி ஒழுகப் பாடல்சான்றுநா(டு)உடன் விளங்கும் நாடா நல்லிசைத்திருந்திய இயல்மொழித் திருந்(து)இழை கணவகுலைஇழி(பு) அறியாச் சாபத்து வயவர்அம்புகளை(வு) அறியாத் தூங்குதுளங்(கு) இருக்கைஇடாஅ ஏணி இயல்அறைக் குருசில்நீர்நிலம் தீவளி விசும்போ(டு) ஐந்தும்அளந்துகடை அறியினும் அளப்பரும் குரையைநின்வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமேஉண்மருந்(து) இன்மரும் வரைகோள் அறியாதுகுரைத்தொடி மழுகிய உலக்கை வயின்தோ(று)அடைச்சேம்(பு) எழுந்த ஆ(டு)று மடாவின்எஃ(கு)உறச் சிவந்த ஊனத்(து) யாவரும்கண்டுமதி மருளும் வாடாச் சொன்றிவயங்குகதிர் விரிந்து வான்அகம் சுடர்வரவறிதுவடக்(கு) இறைஞ்சிய சீர்கால் வெள்ளிபயங்கெழு பொழுதோ(டு) ஆநியம் நிற்பக்கலிழும் கருவியொடு கையுற வணங்கிமன்னுயிர் புரைஇய வலன்ஏர்(பு) இரங்கும்கொண்டல் தண்தளிக் கமம்சூல் மாமழைகார்எதிர் பருவம் மறப்பினும்பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.
பகிர்
கதை

சீர்கால் வெள்ளி

மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · இயன்மொழி வாழ்த்து