கயிறுகுறு முகவை
மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
சினனே காமம் கழிகண் ணோட்டம்அச்சம் பொய்ச்சொல் அன்புமிகு வுடைமைதெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து)அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்துகடலும் கானமும் பலபயம் உதவப்பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாதுமைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம்அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள்மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழியஊழி உய்த்த உரவோர் உம்பல்பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்ஆகெழு கொங்கர் நா(டு)அகப் படுத்தவேல்கெழு தானை வெருவரு தோன்றல்உளைப்பொலிந்த மாஇழைப்பொலிந்த களிறுவம்புபரந்த தேர்அமர்க்(கு)எதிர்ந்த புகல்மறவ ரொடுதுஞ்சுமரம் துவன்றிய மலர்அகன் பறந்தலைஓங்குநிலை வாயிதூங்குபு தகைத்தவில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்கடிமிளைக் குண்டுகிடங்கின்நெடுமதில் நிரைப்பதணத்தண்ணலம் பெருங்கோட்(டு) அகப்பா எறிந்தபொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவபோர்த்(து)எறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்நீர்த்தரு பூசலின் அம்(பு)அழிக்கு நரும்ஒலித்தலை விழவின் மலியும் யாணர்நாடுகெழு தண்பனை சீறினை ஆதலின்குடதிசை மாய்ந்து குணம்முதல் தோன்றிப்பாய்இருள் அகற்றும் பயம்கெழு பண்பின்ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்கவலை வெள்நரி கூஉம்முறை பயிற்றிக்கழல்கண் கூகைக் குழறுகுரல் பாணிக்கருங்கண் பேய்மகள் வழங்கும்பெரும்பாழ் ஆகுமன் அளிய தாமே.
Sinanae kaamam kazhikan noattam / Assam poyssol anpumiku vutaimai / Theralkatu maiyotu piravumiv vulakath(thu) / Aramtheri thikirikku vazhiyatai yaakum / Theethusaen ikanthu nanrumikap purinthu / Katalum kaanamum palapayam uthavap / Pirarpirar naliyaathu vaerrupporul veஃkaathu / Maiil arivinar sevvithin natanthutham / Amarthunaip piriyaathu paath(thu)untu maakkal / Mooththa yaakkaiyotu piniinru kazhiya / Oozhi uyththa uravoar umpal / Ponsey kanissith thinpini utaiththus / Sirarusila ooriya neervaayp paththal / Kayirukuru mukavai mooyina moykkum / Aakezhu kongkar naa(tu)akap patuththa / Vaelkezhu thaanai veruvaru thoanral / Ulaippolintha maa / Izhaippolintha kaliru / Vampuparantha thaer / Amark(ku)ethirntha pukalmarava rotu / Thunjumaram thuvanriya malarakan paranthalai / Oangkunilai vaayithoongkupu thakaiththa / Villisai maattiya vizhusseer aiyavik / Katimilaik kuntukitangkin / Netumathil niraippathanath / Thannalam perungkoat(tu) akappaa erintha / Ponpunai uzhinjai velpoark kuttuva / Poarth(thu)erintha paraiyaar punalseruk kunarum / Neerththaru poosalin am(pu)azhikku narum / Oliththalai vizhavin maliyum yaanar / Naatukezhu thanpanai seerinai aathalin / Kutathisai maaynthu kunammuthal thoanrip / Paayirul akarrum payamkezhu panpin / Njaayiru koataa nanpakal amayaththuk / Kavalai velnari kooummurai payirrik / Kazhalkan kookaik kuzharukural paanik / Karungkan paeymakal vazhangkum / Perumpaazh aakuman aliya thaamae.
மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு