வரைபோல் இஞ்சி
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு
இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடுமழைஎன மருளும் மாஇரும் பஃறோல்எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடுமைந்(து)உடை ஆர்எயில் புடைபட வளைஇவந்துபுறத்(து) இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல்ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்பொல்லா மயலொடு பாடிமிழ்(பு) இழிதரும்மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்துப்புத்துறை போகிய கொற்ற வேந்தேபுனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சிஅணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பிவளன்உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்தகளன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்திஅயல் ஆர்கை வன்கை வினைநர்அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்ஆடுசிறை வாவண்(டு) ஓப்பும்பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு