புலாஅம் பாசறை
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · காட்சிவாழ்த்து
பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்ஓவத் தன்ன வினைபுனை நல்லில்பாவை அன்ன நல்லோள் கணவன்பொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப்புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோபுலர்ந்த சாத்தின் புலரா ஈகைமலர்ந்த மார்பின் மாவண் பாரிமுழவுமண் புலர இரவலர் இனையவாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)எனஇரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்ஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்நல்இசை தரவந் திசினே ஒள்வாள்உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறைநிலவின்அன்ன வெள்வேல் பாடினிமுழவின் போக்கிய வெண்கைவிழவின் அன்னநின் கலிமகி ழானே.
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · காட்சிவாழ்த்து