song 115 · Kalithogai · Five poets

கலித்தொகை 115 · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூரநாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம்புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய்வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ.அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்;நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என்சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்தபூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப்,பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லாஈங்கு எவன் அஞ்சுவது?அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும்அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண்வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்அல்கலும் சூழ்ந்த வினை!

Thoazhi! naam, kaanaamai unta katum kallai, mey koora / Naanaathu senru natungka uraiththaangkuk / Karanthathooum kaiyotu koal pattaam, kantaay; nam / Pul inaththu aayar makan sooti vanthathu oar / Mullai oru kaazhum kanniyum, melliyaal! / Koonthalul peythu mutiththaen man; thoazhi! yaay / Venney uraii viriththa kathuppoatae, / Annaiyum aththanum illaraa, yaay naana, / Annai mun veezhnthanru ap poo. / Athanai vinavalum seyyaal; sinavalum seyyaal; / Neruppuk kai thottavar poala vithirththittu, / Neengkippurangkatai poayinaal. yaanum, en / Saanthu ular koozhai mutiyaa, nilam thaazhntha / Poom karai neelam thazheeith, thalarpu olkip, / Paangkarum kaanaththu oliththaen. - atharku, ellaa / Eengku evan anjuvathu? / Anjal - avan kanni nee punainthaay aayin, namarum / Avan kan atai soozhnthaar ninnai. akal kan / Varaippil manal thaazhap peythu, thiraippil / Vathuvaiyum eengkae ayarpa; athuvae yaam / Alkalum soozhntha vinai!

Share
கதை

முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

நான்காவது பகுதி · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன் பாடியது