நெய்தல் கலி · நல்லாந்துவனார்
ஐந்தாவது பகுதி · நெய்தல் கலி · நல்லாந்துவனார் பாடியது
நல் நுதாஅல்! காண்டை; நினையா, நெடிது உயிரா,என் உற்றாள் கொல்லோ? இஃது ஒத்தி - பல் மாண்நகுதரும் - தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்கண்ணீர் துடையாக், கவிழ்ந்து, நிலன் நோக்கிஅன்ன இடும்பை பல செய்து, தன்னைவினவுவார்க்கு ஏதில சொல்லிக், கனவு போல்,தெருளும் மருளும் மயங்கி வருபவள்கூறுப கேளாமோ, சென்று?'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?நின் உற்ற அல்லல் உரை', என என்னைவினவுவீர்! தெற்றெனக் கேண்மின்; ஒருவன்,'குரல் கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்றுமருவு ஊட்டி, மாறியதன் கொண்டு, எனக்குமருவு உழிப் பட்டது, என் நெஞ்சு.எங்கும் தெரிந்து அது கொள்வேன், அவன் உள் வழி.பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினைதிங்கள்உள் தோன்றி இருந்த குறு முயால்! -எம்கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?காட்டீயாய் ஆயின், கத நாய் கொளுவுவேன்;வேட்டுவர் உள் வழிச் செப்புவேன்; ஆட்டிமதியொடு பாம்பு மடுப்பேன்' மதி திரிந்தஎன் அல்லல் தீராய் எனின்.என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடுவெள் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக்கண்ணோடினாய் போறி, நீ.நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல்உள்ஓடுவேன் ஓடி ஒளிப்பேன்! பொழில் தொறும்நாடுவேன்; கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்?ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உதுக் காண், எம்கோதை புனைந்த வழி.உதுக் காண் - சாஅய் மலர் காட்டி, சால்பு இலான் யாம் ஆடும்பாவை கொண்டு ஓடியுழி.உதுக் காண் - தொய்யில் பொறித்த வழி.உதுக் காண் - 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறன் இல்லான்பைய முயங்கியுழி.அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,விளியா நோய் செய்து, இறந்த அன்புஇல் அவனைத்தெளிய - விசும்பினும் ஞாலத்து அகத்தும்வளியே! எதிர்போம் - பல கதிர் ஞாயிற்றுஒளி உள் வழி எல்லாம் சென்று, முனிபு எம்மைஉண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்கண்ணீர் அழலால் தெளித்து.பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் -பிறங்கு இரு முந்நீர்! - வெறு மணல் ஆகப்புறம் காலின் போக இறைப்பேன், முயலின்அறம் புணை ஆகலும் உண்டு.துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின், நினக்கு ஒன்றுபாடுவேன், என் நோய் உரைத்து.புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் -எல்லி ஆக, 'எல்லை' என்று ஆங்கே, பகல் முனிவேன்.எல்லிய காலை இரா முனிவேன்; யான் உற்றஅல்லல் களைவார் இலேன்.ஓஒ! கடலே! தெற்றெனக் கண் உள்ளே தோன்ற இமை எடுத்துப்'பற்றுவேன்' என்று, யான் விழிக்கும்கால் மற்றும் என்நெஞ்சத்துஉள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்செய்யும், அறன் இல் அவன்.ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள்நீர் பெய்த காலே சினம் தணியும்; மற்று இஃதோஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீநீர் உள் புகினும் சுடும்.ஓஒ! கடலே! 'எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள்?' என்று இந் நோய்உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கேஇற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னைஅற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு.ஆங்கு,கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீரக்கெடல் அரும் காதலர் துனை தரப், பிணி நீங்கி,அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம்நல் அவைஉள் படக் கெட்டாங்கு,இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே.
Nal nuthaaal! kaantai; ninaiyaa, netithu uyiraa, / En urraal kolloa? iஃthu oththi - pal maan / Nakutharum - than naanuk kaivittu, ikutharum / Kanneer thutaiyaak, kavizhnthu, nilan noakki / Anna itumpai pala seythu, thannai / Vinavuvaarkku aethila sollik, kanavu poal, / Therulum marulum mayangki varupaval / Koorupa kaelaamoa, senru? / 'ellaa! nee en anangku urranai? yaar nin ithu seythaar? / Nin urra allal urai', ena ennai / Vinavuveer! therrenak kaenmin; oruvan, / 'kural koonthaal! en urra evvam ninakku yaan / Uraippanaith thangkirru, en in uyir' enru / Maruvu ootti, maariyathan kontu, enakku / Maruvu uzhip pattathu, en nenju. / Engkum therinthu athu kolvaen, avan ul vazhi. / Pongku iru munneer akam ellaam noakkinai / Thingkalul thoanri iruntha kuru muyaal! - / Emkael ithan akaththu ulvazhik kaatteemoa? / Kaatteeyaay aayin, katha naay koluvuvaen; / Vaettuvar ul vazhis seppuvaen; aatti / Mathiyotu paampu matuppaen' mathi thirintha / En allal theeraay enin. / Enru aangkae ul ninra evvam uraippa mathiyotu / Vel mazhai oatip pukuthi; sirithu ennaik / Kannoatinaay poari, nee. / Neetu ilaith thaazhaith thuvar manal kaanalul / Oatuvaen oati olippaen! pozhil thorum / Naatuvaen; kalvan karanthu irukkarpaalan kol? / Aay poo atumpin alar kontu uthuk kaan, em / Koathai punaintha vazhi. / Uthuk kaan - saaay malar kaatti, saalpu ilaan yaam aatum / Paavai kontu oatiyuzhi. / Uthuk kaan - thoyyil poriththa vazhi. / Uthuk kaan - 'thaiyaal! thaeru' enath thaerri, aran illaan / Paiya muyangkiyuzhi. / Aliya en ullaththu, uyavuth thaer oornthu, / Viliyaa noay seythu, irantha anpuil avanaith / Theliya - visumpinum njaalaththu akaththum / Valiyae! ethirpoam - pala kathir njaayirru / Oli ul vazhi ellaam senru, munipu emmai / Unmai nalan untu oliththaanaik kaatteemoa; / Kaattaayael, mannakam ellaam orungku sutuvaen, en / Kanneer azhalaal theliththu. / Paenaan thuranthaanai naatum itam vitaay aayin - / Pirangku iru munneer! - veru manal aakap / Puram kaalin poaka iraippaen, muyalin / Aram punai aakalum untu. / Thuranthaanai naatith tharukirpaay aayin, ninakku onru / Paatuvaen, en noay uraiththu. / Pulliya kaelir punarum pozhuthu unaraen - / Elli aaka, 'ellai' enru aangkae, pakal munivaen. / Elliya kaalai iraa munivaen; yaan urra / Allal kalaivaar ilaen. / Oao! katalae! therrenak kan ullae thoanra imai etuththup / 'parruvaen' enru, yaan vizhikkumkaal marrum en / Nenjaththuul oati oliththu, aangkae, thunjaa noay / Seyyum, aran il avan. / Oao! katalae! oor thalaikkontu kanalum katum thee ul / Neer peytha kaalae sinam thaniyum; marru iஃthoa / Eeram il kaelvan ureeiya kaamath thee / Neer ul pukinum sutum. / Oao! katalae! 'erram ilaatti en aemurraal?' enru in noay / Urru ariyaathaaroa nakuka! nayanthaangkae / Irraa ariyin, muyangkalaen, marru ennai / Arraththu ittu aarru aruththaan maarpu. / Aangku, / Katalotu pulampuvoal kalangku anjar theerak / Ketal arum kaathalar thunai tharap, pini neengki, / Aran arinthu ozhukum angkanaalanaith / Thiran ilaar etuththu thee mozhi ellaam / Nal avaiul patak kettaangku, / Illaakinru aval aay nuthal pasappae.
ஐந்தாவது பகுதி · நெய்தல் கலி · நல்லாந்துவனார் பாடியது