நெய்தல் கலி · நல்லாந்துவனார்
ஐந்தாவது பகுதி · நெய்தல் கலி · நல்லாந்துவனார் பாடியது
உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையேவரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து, தெறல் மாலைஅரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீரஅன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன்துன்னி அகலத் துறந்த அணியளாய்,நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு,பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந்நீர் தன்,கூர் எயிறு ஆடி, குவி முலை மேல் வார்தர,தேர் வழி நின்று தெருமரும், ஆய் இழைகூறுப கேளாமோ, சென்று?'எல் இழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று,உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இதுகேட்டீமின், எல்லீரும் வந்து:வறம் தெற மாற்றிய வானமும் போலும்;நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் -சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,என் மேல் நிலைஇய நோய்.'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும்தக்கவிர் போலும்! இழந்திலேன் மன்னோ -மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன!உக்காண் - இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆகச்செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்நக்கது, பல் மாண் நினைந்து.கரை காணா நோயுள் அழுந்தாதவனைப்புரை தவ கூறிக், கொடுமை நுவல்வீர்!வரைபவன் என்னின் அகலான் - அவனைத்,திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்உரை கேட்புஉழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான்யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று?மருள் கூர் பிணை போல் மயங்க, வெந்நோய் செய்யும்மாலையும் வந்து, மயங்கி எரி நுதியாமம் தலை வந்தன்று ஆயின், அதற்கு என் நோய்பாடுவேன், பல்லாருள் சென்று.யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும்யாமம், நீ துஞ்சலை மன்.எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண்முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின்கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல்ஓடிச் சுழல்வது மன்.பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே!நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்;கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வதுபோலாது, என் மெய் கனலும் நோய்.இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,வருத்துறும் யாக்கை, வருந்துதல் ஆற்றேன்;அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்திப்பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச்செல்வேன், விழுமம் உழந்து.என ஆங்கு பாட, அருள் உற்று,வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்நல் எழில் மார்பன் முயங்கலின்அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே.
Urai sela uyarnthu oangkis saernthaarai oru nilaiyae / Varai nillaa vizhumam ureei natukku uraiththu, theral maalai / Araisinum anpu inraam, kaamam; purai theera / Anna mel saekkaiyul aaraathu aliththavan / Thunni akalath thurantha aniyalaay, / Naanum niraiyum unarkallaal, thoal njekizhpu, / Paer amar unkan nirai malka, anneer than, / Koor eyiru aati, kuvi mulai mael vaarthara, / Thaer vazhi ninru therumarum, aay izhai / Koorupa kaelaamoa, senru? / 'el izhaay! erri varainthaanai, naanum maranthaal' enru, / Urranir poala, vinavuthir! marru ithu / Kaetteemin, elleerum vanthu: / Varam thera maarriya vaanamum poalum; / Nirainthu ennai maayppathu oar vellamum poalum - / Siranthavan thoo ara neeppa, pirangki vanthu, / En mael nilaiiya noay. / 'nakku nalanum izhanthaal, ival' ennum / Thakkavir poalum! izhanthilaen mannoa - / Mikka en naanum nalanum en ullamum / Akkaal avan uzhai aangkae ozhinthana! / Ukkaan - iஃthoa utampu uyirkku oorru aakas / Sekkar am pullith thikiri alavanotu, yaan / Nakkathu, pal maan ninainthu. / Karai kaanaa noayul azhunthaathavanaip / Purai thava koorik, kotumai nuvalveer! / Varaipavan ennin akalaan - avanaith, / Thirai tharum munneer valaaakam ellaam, / Nirai kathir njaayirrai, naatu enraen; yaanum / Urai kaetpuuzhi ellaam selvaen; purai theernthaan / Yaantu olippaan koloa marru? / Marul koor pinai poal mayangka, vennoay seyyum / Maalaiyum vanthu, mayangki eri nuthi / Yaamam thalai vanthanru aayin, atharku en noay / Paatuvaen, pallaarul senru. / Yaan urra evvam uraippin, palarth thuyirrum / Yaamam, nee thunjalai man. / Ethirkollum njaalam, thuyil aaraathu aangkan / Muthirpu en mael murriya vennoay uraippin / Kathirkal mazhungki, mathiyum athirvathu poal / Oatis suzhalvathu man. / Paer oor marukil perum thuyil saanreerae! / Neerais seruththu, niraivura oampumin; / Kaar thalaikkontu pozhiyinum, theervathu / Poalaathu, en mey kanalum noay. / Iruppinum nenjam kanalum; selinae, / Varuththurum yaakkai, varunthuthal aarraen; / Aruppam utaiththu, ennul evvam poruththip / Pori sey punai paavai poala varithu uyangkis / Selvaen, vizhumam uzhanthu. / Ena aangku paata, arul urru, / Varam koor vaanaththu val uraikku alamarum / Pullirku athu pozhinthaaangku, marruth than / Nal ezhil maarpan muyangkalin / Allal theernthanru aay izhai panpae.
ஐந்தாவது பகுதி · நெய்தல் கலி · நல்லாந்துவனார் பாடியது