ராகம்: சிம்மேந்திர மத்யமம்
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
என்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய்சீக்கிரம் வந்து சிவசித்தியும் தந்தருள்வாய்இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவேசிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்நினைப்பெலாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவேதிருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவேதிருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்நித்யானந்தமே நின்னுரு வாகையினால்அத்வை தானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்ஸ்கந்த குருநாதா ஸ்கந்தகுருநாதா கேள்மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய்வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்தாரித் திரியங்களையுன் தடிகொண்டு விரட்டிடுவாய்துக்கங்க ளனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடாமெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
என்னுள் உன்னைக் காண வரம் அருள்வாய்; விரைந்து வந்து சிவசித்தியும் தா. இடகலை பிங்கலையை அறியேன், இந்திரியங்களை அடக்கி இருக்கவும் மாட்டேன்; ஆனால் உன் திருவடியைச் சிக்கெனப் பற்றினேன் — உபதேசம் செப்பு. காமக் கசடுகளைக் களைந்து, சித்த சுத்தியும் ஜபமும் தந்து, எல்லா நினைப்பும் உன்னையே நினைக்கச் செய். திருவருளில் நிலைபெறச் செய்து, நித்யானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்து. வினைகளை வேலால் விரட்டி, துக்கங்களைத் தொலைதூரம் போக்கி, பாப உடலைப் பரிசுத்தமாக்கி, ஆசைப் பேயையும் அகந்தைப் பிசாசையும் அழித்து, உன்னருளில் இருத்து.
Grant me the boon of seeing you within me; come quickly and give the siddhi of Shiva. I know nothing of ida and pingala, and I cannot sit with the senses curbed; but I have caught your feet and hold them fast — give me the teaching. Take away the dross of desire, give purity of mind and japa, and make every thought a thought of you. Fix me in grace and drown me for a moment in eternal joy. Drive out my karma with the vel, put sorrow far away, make this sinful body clean, kill the demon of craving and the ghost of pride, and set me in your grace.
தான் யோகியல்ல என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, குருவின் அருளையே வழியாகக் கேட்கும் பாடல்.
It admits plainly that the singer is no yogi, and asks for the guru's grace to be the way.
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
Raga: சிம்மேந்திர மத்யமம்