பாடல் 12 · ஸ்ரீ கந்தகுரு கவசம் · ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்

கந்தகுரு கவசம் 12 · தன்யாஸி

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனேஆறுமுக மானகுரோ அறிந்திட்டேனுன் மஹிமைஇக்கணமே வருவாய் என்ஸ்கந்த குருவே நீஎன்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவேஅரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பாவந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோஅன்புத் தெய்வமே ஆறுமுக மானவனேசுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்அகந்தையெல்லா மழித்து அன்பினை ஊட்டிடுவாய்அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பாஅன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடுஅன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையேஉறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீஅங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்அன்பே சிவமும் அன்பே சக்தியும்அன்பே ஹரியும் அன்பே பிரமனும்அன்பே தேவரும் அன்பே மனிதரும்அன்பே நீயும் அன்பே நானும்அன்பே சத்தியம் அன்பே நித்தியம்அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்அன்பே மௌனம் அன்பே மோக்ஷம்அன்பே ப்ரமமும் அன்பே அனைத்துமென்றாய்அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்எங்கும் நிறைந்த அன்பேஎன் குருநாதனப்பாஅன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்ஸ்கந்தாஸ் ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவேஸ்கந்தாஸ் ரமந்தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுருஇருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குருஎல்லை யில்லாதஉன் இறைவெளியைக் காட்டிடுவாய்முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவேநம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோஉனையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
பகிர்

பொருள்

கண்கண்ட தெய்வமே, கலியுக வரதனே, அறிந்திட்டேன் உன் மகிமையை; இக்கணமே வந்து ஆட்கொள். சோகம் அகற்றி, ஞானம் அருளி, ஞான பண்டிதனாக்கு. அகந்தையை அழித்து அன்பை ஊட்டி, அன்பையே கண்ணாகக் காத்து, உள்ளும் புறமும் அன்பை உறுதியாகப் பற்றச் செய். அன்பே இறைவெளி, அன்பே சிவம், சக்தி, ஹரி, பிரமன், தேவர், மனிதர், நீயும் நானும்; அன்பே சத்தியம், நித்தியம், சாந்தம், ஆனந்தம், மௌனம், மோட்சம், பிரம்மம், அனைத்தும். அன்பில்லாத இடம் எங்கும் இல்லை. ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தஜோதியாய் அமர்ந்த குரு, இருளை அகற்ற எழுந்தவர், இறைவெளியைக் காட்டி முக்தி தருவார்.

Meaning

God seen by the eye, boon-giver of the Kali age, I have known your greatness; come this instant and take me. Remove my sorrow, give knowledge, make me a knower. Destroy pride and feed me love; make love my very eye, and let me hold it firmly within and without. Love is the space of God; love is Shiva, Shakti, Hari, Brahma, the gods, the humans, you and I; love is truth, the eternal, peace, bliss, silence, release, brahman, all. There is no place where love is not. In Skandagiri stands the guru as the light of Skanda, risen to scatter darkness; he will show the space of God and grant release.

சொற்பொருள் Word by word

கலியுக வரதன்
the boon-giver of the Kali age
இறைவெளி
the space of the divine
சாந்தம்
peace
ஸ்கந்தாஸ்ரமம்
the Skandagiri ashram

விளக்கம்

'அன்பே அனைத்தும்' என்று அன்பைப் பட்டியலிட்டுப் பாடும் பாடல்; இந்நூலின் இதயம் இது.

Explanation

Song of love as everything: it lists love into Shiva, Shakti, truth, silence and release. This is the heart of the hymn.

கதை

ராகம்: தன்யாஸி

ராகம்: தன்யாஸி

A story

Raga: தன்யாஸி