ராகம்: ஹம்ஸானந்தி
ராகம்: ஹம்ஸானந்தி
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்பக்தர்களும் போற்றும் பழிநிமலை முருகா கேள்கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில்கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோஅயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியேபேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பாபரமானந்த மதில்எனை மறக்க பாலிப்பாய்மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோசிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பாபழம்நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோதிருவா வினன்குடியில் திருமுருகனானாயோகுமரா முருகா குருகுகா வேலவனேஅகத்தியர்க் குத்தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தைகலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்ஔவைக்கு அருள் செய்த அறுமுருகா ஸ்கந்தகுரோஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்போகருக்கருள் செய்த புவன சுந்தரனேதண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பாஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனேதெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியேஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தஜோதி யானவனேகடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
நால்வர், அருணகிரி, பன்னிரு சித்தர்கள், பக்தர்கள் போற்றும் பழநிமலை முருகா கேள். கொங்கு தேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டு, சேலம் நகரில் கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரியில், ஸ்கந்தாஸ்ரமத்தில் ஞானஸ்கந்த சத்குருவாய் அமர்ந்திருக்கும் ஜோதியே, என் தளர்ச்சியை அகற்று. அகத்தியருக்குத் தமிழ் தந்து, கலசமுனி போற்றிய கலியுக வரதா, ஔவைக்கு அருள் செய்தவா, போகருக்கு அருள் செய்த புவன சுந்தரா, தண்டபாணித் தெய்வமே, ஆண்டிக் கோலத்தில் தண்டுடன் அணைத்து, கடைக்கண்ணால் பார்த்து அருள்வாய்.
Murugan of Pazhani hill, praised by the four, by Arunagiri, by the twelve siddhas and by devotees, hear me. Dwelling on every hill of the Kongu land, in Skandagiri above the Kannimar stream in Salem, seated in the ashram as the true guru, the light of Skanda's wisdom — take away my weariness. You gave Tamil to Agastya; Kalasa Muni praised you as the boon-giver of the Kali age; you graced Avvai; you graced Bogar, beauty of the world; god of the staff, embrace me in the mendicant's form with your staff, and look on me with the corner of your eye.
ஸ்கந்தகிரியை நேரில் பாடும் பாடல்; தமிழுக்கு அருள் செய்த முருகனைச் சித்தர் மரபில் நிறுத்துகிறது.
The song that sings Skandagiri itself, setting Murugan in the line of the Tamil siddhas.
ராகம்: ஹம்ஸானந்தி
Raga: ஹம்ஸானந்தி