ராகம்: பிலஹரி
ராகம்: பிலஹரி
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்கண்கண்ட தெய்வமே கலியுக வரதனேகந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியைதிருவடியை நம்பினேன் திருவடி சாக்ஷ¢யாகபுவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியேகேள்நின் நாமம் ஏத்துவதே நான்செய்யும் தவமாகும்நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்அங்கிங் கெள்தபடி எங்குமே முருகனப்பாமுருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பாஅப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பாஅருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுருஸ்கந்தாஸ் ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பாவேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீசந்தேக மில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
ஏழையைக் காத்திடப்பா; உன் நாமத்தை ஏத்துகிறேன். உன்னையன்றி வேறொன்றையும் நம்பேன். கண்கண்ட தெய்வமே, கலியுக வரதனே, 'கந்தன்' என்ற பேர் சொன்னால் நோய் கடிதாகத் தீரும். புவனேஸ்வரி மைந்தா, உன் திருவடியை நம்பினேன்; நின் நாமம் ஏத்துவதே என் தவம். மூச்செல்லாம் 'முருகா முருகா' என்றே விடுவேன்; உள்ளும் புறமும் முருகனையே காண்பேன். முருகன் இல்லாவிட்டால் மூவுலகமே இல்லை; அருளெல்லாம் முருகன், அன்பெல்லாம் முருகன். ஸ்கந்தாஸ்ரமத்து ஸ்கந்தகுருவின் அடிபற்றிச் சரணம் அடைந்தவர் சாயுஜ்யம் பெறுவர் — இது சத்தியம், சந்தேகமில்லை.
Guard this poor man; I praise your name. I trust nothing but you. God seen by the eye, boon-giver of the Kali age: say the name Kandan and illness at once falls away. Son of Bhuvaneshwari, I have trusted your feet; to praise your name is my tapas. Every breath I will let out as 'Muruga, Muruga'; within and without I will see only Murugan. If there were no Murugan there would be no three worlds; all grace is Murugan, all love is Murugan. Whoever holds the feet of the Skanda Guru of Skandagiri and takes refuge in him wins union with him — this is truth, without doubt.
நாமத்தின் மகிமையைச் சொல்லும் பாடல்: 'கந்தன்' என்ற ஒரு சொல்லே நோயைத் தீர்க்கும் என்கிறார்.
A song on the power of the name: the single word 'Kandan' is enough to end illness.
ராகம்: பிலஹரி
Raga: பிலஹரி