ராகம்: கானடா
ராகம்: கானடா
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்துறுத்தி ஏற்றுவீரேல்கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்அறம்பொருள் இன்பம்வீடு அதிசுலப மாய்க்கிட்டும்ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்கள்ளமிலா வுளத்தோடு கந்தகுரு கவசந்தன்னைசிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்றுகாத்திடுவான் கந்தகுரு கவலையில்லை நிச்சயமாய்ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீகந்தகுரு கவசந்தன்னை ஓதுவதே தவமெனவேஉணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப்பெரிதானஇகபர சுகமுண்டாம் என்னாளும் துன்பமில்லைஇன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்பிறவிப் பிணியகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்துகாத்து ரக்ஷ¢க்கும் கந்தகுரு கவசமே
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்துறுத்தி ஏற்றால், கர்வமும் காமமும் குரோதமும் கலிதோஷமும் அகலும்; முன்செய்த வினை அகன்று முருகன் அருள் கிட்டும்; அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும். ஆசாரம், சீலம், ஆதிநேம நிஷ்டை, கள்ளமில்லா உள்ளம், சிரத்தை, பக்தி — இவற்றோடு பாராயணம் செய்தால் கந்தனையே காணலாம். பகலிரவு பாராமல் ஒருமனதாய்ப் பகர்ந்தால், திருமுருகன் வேல்கொண்டு எல்லாத் திசையிலும் நின்று காக்கிறான்; கவலையில்லை. கவசம் ஓதுவதே தவம் என்று உணர்ந்து ஓதினால் இகபர சுகம் உண்டு, துன்பமில்லை, இஷ்டசித்தி கூடும், பிறவிப் பிணி அகற்றி பிரம்ம நிஷ்டை தந்து காத்தருளும்.
Hold this kavacham in your mind and take it up: pride, lust, anger and the evil of the age fall away; old karma goes and Murugan's grace arrives; virtue, wealth, joy and release come very easily. With conduct, character, the ancient discipline, a heart without deceit, faith and devotion, recite it and you will see Kandan himself. Recite with one mind, not counting day and night, and the vel of Murugan stands in every direction and guards you; have no worry. Know that reciting the kavacham is itself tapas: then come the joys of this world and the next, no sorrow, the fulfilment of what you wish; it removes the sickness of rebirth, grants the steadiness of brahman and guards you.
பாராயண முறையையும் பயனையும் சொல்லும் பாடல்; 'ஓதுவதே தவம்' என்பது இதன் சுருக்கம்.
It gives the way of recitation and its fruit; its essence is that reciting is itself austerity.
ராகம்: கானடா
Raga: கானடா