வடுவடு நுண்ணயிர்
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொரவிளங்(கு)இரும் புணா உருமென முழங்கும்கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்கூவல் துழந்த தடந்தாள் நாரைகுவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடியவடுஅடு நுண்அயிர் ஊதை உஞற்றும்தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள்வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணிஅரவழங்கும் பெரும்தெய்வத்துவளைஞரலும் பனிப்பெளவத்துக்குணகுட கடலோ(டு) ஆயிடை மணந்தபந்தர் அந்தரம் வேய்ந்துவண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்நனைஉறு நறவின் நா(டு)உடன் கமழச்சுடர் நுதல் மடநோக்கின்வாள்நகை இலங்(கு)எயிற்(று)அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்பாடல் சான்று நீடினை உறைதலின்வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மெனஉள்ளுவர் கொல்லோநின் உணரா தோரேமழைதவழும் பெருங்குன்றத்துச்செயிர்உடைய அர(வு)எறிந்துகடும்சினத்த மிடல்தபுக்கும்பெரும்சினப்புயல் ஏ(று)அனையைதாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்எஃ(கு)உடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்துநிறம்பெயர் கண்ணிப் பருந்(து) ஊ(று)அளப்பத்தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமைகைவல் இளையர் கையலை அழுங்கமாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம்வலைவித் தன்ன நோக்கலைகடியையால் நெடுந்தகை செருவித் தானே.
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு