நில்லாத்தானை
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · காட்சிவாழ்த்து
வள்ளியை என்றலின் காண்குவந் திசினேஉள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணிவீங்(கு)இறைத் தடைஅய அமைமருள் பணைத்தோள்ஏந்(து)எழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்மின்இழை விறலியர் நின்மறம் பாடஇரவலர் புன்கண் தீர நாள்தொறும்உரைசால் நன்கலம் வரை(வு)இல வீசிஅனையை ஆகல் மாறே எனையதூஉம்உயர்நிலை உலகத்துச் செல்லா(து) இவண்நின்(று)இருநிலம் மருங்கின் நெடிதுமன் னியரோநிலந்தப விடூஉம் ஏணிப் புலம்படர்ந்துபடுகண் முரசம் நடுவண் சிலைப்பத்தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்ஏவல் வியம்கொண்(டு) இளையரொ(டு) எழுதரும்ஒல்லார் யானை காணின்நில்லாத் தானை இறைகிழ வோயே.
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · காட்சிவாழ்த்து