குண்டுகண் அகழி
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · செந்துறைப் பாடாண்பாட்டு
வென்றுகலம் தாணஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர்வாடா யாணர் நாடுதிறை கொடுப்பநல்கினை ஆகுமதி எம்என்(று) அருளிக்கல்பிறங்கு வைப்பின் கட(று)அரை யாத்தநின்தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்செம்பொறிச் சிலம்பொ(டு) அணித்தழை தூங்கும்எந்திரத் தகைப்பின் அம்(பு)உடை வாயில்கோள்வல் முதலைய குண்டுகண் அகழிவான்உற ஓங்கிய வளைந்துசெய் புசைஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கிநின்னின் தந்த மன்எயில் அல்லதுமுன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பியஎயில்முகப் படுத்தல் யாவது வளையினும்பிறி(து)ஆறு செல்மதி சினம்கெழு குருசில்எழூஉப்புறம் தாணஇப் பொன்பிணிப் பலகைக்குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவிவேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவிமேம்படு வெல்கொடி நுடங்கத்தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே.
Venrukalam thaanaiyar vaentupulath(thu) iruththavar / Vaataa yaanar naatuthirai kotuppa / Nalkinai aakumathi emen(ru) arulik / Kalpirangku vaippin kata(ru)arai yaaththanin / Tholpukazh moothoors selkuvai yaayin / Semporis silampo(tu) aniththazhai thoongkum / Enthirath thakaippin am(pu)utai vaayil / Koalval muthalaiya kuntukan akazhi / Vaanura oangkiya valainthusey pusai / Onnaath thevvar munaiketa vilangki / Ninnin thantha maneyil allathu / Munnum pinnumnin munnoar oampiya / Eyilmukap patuththal yaavathu valaiyinum / Piri(thu)aaru selmathi sinamkezhu kurusil / Ezhoouppuram thaanaip ponpinip palakaik / Kuzhoounilaip puthavin kathavumey kaanin / Thaempaay kataaththotu kaazhkai neevi / Vaengkai venra porikilar pukarnuthal / Aenthukai suruttith thoatti neevi / Maempatu velkoti nutangkath / Thaangkal aakaa aangkunin kalirae.
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · செந்துறைப் பாடாண்பாட்டு