பாலைக்கலி · பெருங்கொடுங்கோன்
முதலாவது பகுதி · பாலைக்கலி · பெருங்கொடுங்கோன் பாடியது
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும், தாம்கொண்டது கொடுக்கும்கால் முகனும், வேறு ஆகுதல்பண்டும் இவ் உலகத்து இயற்கை; அ·து இன்றும்புதுவது அன்றே - புலன் உடை மாந்திர்! -தாய் உயிர் பெய்த பாவை போல,நலன் உடையார் மொழிக் கண் தாவார்; தாம் தம் நலம்தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்கும்கால்,ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை?நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்தசெறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின்பறி முறை பாராட்டினையோ? - ஐய!நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்னஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்செய் வினை பாராட்டினையோ? - ஐய!குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும்இளமுலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்தளர்முலை பாராட்டினையோ? - ஐய!என ஆங்கு,அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாடச்,சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண்படர் கூற நின்றதும் உண்டோ - தொடர் கூரத்,துவ்வாமை வந்தக் கடை?
முதலாவது பகுதி · பாலைக்கலி · பெருங்கொடுங்கோன் பாடியது