ஔவையார் மரபுசுட்ட பழமா, சுடாத பழமா?
ஔவையார் மரபிலிருந்து. ஒரு வெயில் நாளில் முதிய புலவர் ஔவையார் களைப்போடு நடந்து வந்து ஒரு நாவல் மரத்தடியில் ஓய்வெடுத்தார். மரத்தின் மேல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருந்தான். "பாட்டி, பழம் வேண்டுமா? சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டான்.
பழத்தைச் சுடுவதா என்று வியந்த ஔவையார், "சுட்ட பழமே போடு" என்றார். சிறுவன் கிளையை உலுக்க, பழங்கள் மணலில் விழுந்தன. ஔவையார் ஒவ்வொன்றையும் எடுத்து, ஒட்டிய மணலை ஊதினார். "பாட்டி, பழம் சுடுகிறதா? ஊதுகிறீர்களே!" என்று சிறுவன் சிரித்தான். பெரும் புலவரான தம்மை ஒரு சிறுவன் வென்றதை உணர்ந்து ஔவையார் வியந்தபோது, அவன் முருகனாகக் காட்சி தந்தான். இந்தப் பாடல் போற்றும் "காளைக் குமரேசன்", விளையாடும் இளைய முருகன் இவனே.
Avvaiyar traditionRoasted Fruit or Unroasted?
From the Avvaiyar tradition. On a hot day the aged poet Avvaiyar, tired from walking, rested in the shade of a naval tree. A cowherd boy was sitting up in its branches. 'Grandmother, would you like some fruit?' he called. 'Do you want roasted fruit or unroasted fruit?'
Puzzled at the idea of roasted fruit, Avvaiyar said, 'Give me the roasted ones.' The boy shook the branch and the fruits fell onto the hot sand. Avvaiyar picked each one up and blew on it to clear away the sand. The boy laughed: 'Is the fruit too hot, grandmother? You are blowing on it!'
The great poet saw that a small boy had outwitted her with a play on words, and as she marvelled, he revealed himself as Murugan. This playful, youthful Lord, who teaches with a smile, is the 'kaalai Kumaresan' whom Arunagirinathar bows to in this verse.