பழநி
பழநி
தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் ...... தனதானபுடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்பொருமிக் கலசத் ...... திணையாயபுளகக் களபக் கெருவத் தனமெய்ப்புணரத் தலையிட் ...... டமரேசெய்அடைவிற் றினமுற் றவசப் படுமெற்கறிவிற் பதடிக் ...... கவமானஅசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்றடிமைக் கொருசொற் ...... புகல்வாயேகுடமொத் தகடக் கரடக் கலுழிக்குணமெய்க் களிறுக் ...... கிளையோனேகுடிபுக் கிடமிட் டசுரப் படையைக்குறுகித் தகரப் ...... பொரும்வேலாபடலைச் செறிநற் கதலிக் குலையிற்பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள்பழனக் கரையிற் கழைமுத் துகுநற்பழநிக் குமரப் ...... பெருமாளே.
பழநி
பழநி