செவ்வேள்
கடவுள் வாழ்த்து · நப்பண்ணனார் பாடியது · இசை: மருத்துவன் நல்லச்சுதனார் · பண்: காந்தாரம்
— வள்ளியை முருகன் வதுவை கொண்டது —நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,‘அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்இரு நிலத்தோரும் இயைக!‘ என, ஈத்த நின்தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்குசாறு கொள் துறக்கத்தவளடுமாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.— கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி —புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,சிறந்தோர் உலகம் படருநர் போல,உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு--நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டியதார் போலும், மாலைத் தலை நிறையால்--தண் மணல்ஆர் வேலை யாத்திரை செல் யாறு.— பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி —சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்புடை வரு சூழல்--புலம் மாண் வழுதிமட மயில் ஓரும் மனையவரோடும்,கடன் அறி காரியக் கண்ணவரோடும்--நின்சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்பாடு வலம் திரி பண்பின்-- பழ மதிச்சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,பாடிய நாவின், பரந்த உவகையின்,நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,படு மணி யானை நெடியாய்! நீ மேயகடி நகர் சூழ் நுவலுங்கால்.— குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை —தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,வம்பு அணி பூங் கயிறு வாங்கி, மரன் அசைப்பார்--வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;திண் தேர் வழியின் செல நிறுப்பார்--கண்டக்கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்துபரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்றஇடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!— மலைச் சிறப்பு - வழுதியுடன் ஏறியோர் கண்டவை —குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,தெய்வப் பிரமம் செய்குவோரும்,கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,வேள்லியின் அழகு இயல் விளம்புவோரும்;கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,ஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்;என்றூழ் உற வரும் இரு சுடர் நேமிஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்;‘இரதி காமன், இவள் இவன்‘ எனாஅ,விரகியர் வினவ, வினா இறுப்போரும்;‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உருஒன்றிய படி இது‘ என்று உரை செய்வோரும்:இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்சோபன நிலையது--துணி பரங்குன்றத்துமாஅல் முருகன் மாட மருங்கு.— குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி —பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, ‘யான்வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்ஏஎ, ஓஒ!‘ என விளி ஏற்பிக்க,‘ஏஎ, ஓஒ‘ என்று ஏலா அவ் விளிஅவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமைமீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே--வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.— இள மகளிரின் மருட்சி —நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப,உதிர்த்த சுனையின் எடுத்த தலையஅலர் முகிழ் உற, அவை கிடப்ப,‘தெரி மலர், நனை, உறுவ,ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்தமைந்தன்; அருகு ஒன்று மற்று-இளம் பார்ப்பு‘ எனஆங்கு இள மகளிர் மருள-- பாங்கர்,— குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல் —பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்கமணந்தவை, போல, வரை மலை எல்லாம்நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;விடியல் வியல் வானம் போலப் பொலியும்--நெடியாய்! நின் குன்றின்மிசை.— கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும் —தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்நின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால்புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா.பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,கன்னிமை கனிந்த காலத்தார், நின்கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்--மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்முறுவல் தலையளி எய்தார்--நின் குன்றம்குறுகிச் சிறப்பு உணாக்கால்.— முருகப் பெருமானை வாழ்த்துதல் —குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்சிறப்பு உணாக் கேட்டி செவி.உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கேபடையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!
கடவுள் வாழ்த்து · நப்பண்ணனார் பாடியது · இசை: மருத்துவன் நல்லச்சுதனார் · பண்: காந்தாரம்