பாடல் 43 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 43 · ஏறாவேணி

கவரி முச்சிக் கார்விரி கூந்தல்ஊசல் மேவல் சேய்இழை மகளிர்உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்பெரும்கை மதமாப் புகுதா஢ன் அவற்றுள்விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக்கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரைவடதிசை எல்லை இமய மாகத்தென்னங் குமரியொ(டு) ஆயிடை அரசர்முர(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழச்சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்தபோர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவஇரும்பணை திரங்கப் பெரும்பயல் ஒளிப்பக்குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழஅருவிஅற்ற பெருவறல் காலையும்அருஞ்செலல் பேராற்(று) இருங்கரை உடைத்துக்கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலையவரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்(து)ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்(கு)உறுவர் ஆர ஓம்பா(து) உண்டுநகைவர் ஆர நன்கலம் சிதறிஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்பாடு விறலியர் பல்பிடி பெறுகதுய்வீ வாகை நுண்கொடி உழிஞைவென்றி மேவல் உருகெழு சிறப்பின்கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுகமன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்அகவலன் பெறுக மாவே என்றும்இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமேநிணம்சுடு புகையொடு கனல்சினந்(து) அவிராதுநிரம்(பு)அகல்(பு) அறியா ஏறா ஏணிநிறைந்து நெடி(து)இராத் தசும்பின் வயிரியர்உண்(டு)எனத் தவாஅக் கள்ளின்வண்கை வேந்தேநின் கலிமகி ழானே.
பகிர்
கதை

ஏறாவேணி

ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · இயன்மொழிவாழ்த்து