பாடல் 41 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 41 · சுடர்வீவேங்கை

புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனியவணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்பண்அமை முழவும் பதலையும் பிறவும்கண்அறுத்(து) இயற்றிய தூம்பொடு சுருக்கிக்காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்கைவல் இளையர் கடவுள் பழிச்சமறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறுவரைசேர்(பு) எழுந்த சுடர்வீ வேங்கைப்பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச்சேஎர் உற்ற செல்படை மறவர்தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்குவழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்மழைபெயல் மாறிய கழைதிரங்(கு) அத்தம்ஒன்(று)இரண்(டு) அலபல கழிந்து திண்தேர்வசைஇல் நெடுந்தகை காண்குவந் திசினேதாவல் உய்யுமோ மற்றே தாவாதுவஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்முர(சு)உடைப் பெருஞ்சமத்(து) அரசுபடக் கடந்துவெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர்மிள(கு)எறி உலக்கையின் இருந்தலை இடித்துவை(கு)ஆர்ப்(பு) எழுந்த மைபடு பரப்பின்எடுத்தே(று) ஏய கடிப்(பு)உடை வியன்கண்வலம்படு சீர்த்தி ஒருங்(கு)உடன் இயைந்துகால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக்கடும்பரிப் புரவி ஊர்ந்தநின்படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.செந்துறைப் பாடாண்பாட்டு

Punarpuri narampin theemthotai pazhuniya / Vanaramai nalyaazh ilaiyar poruppap / Panamai muzhavum pathalaiyum piravum / Kanaruth(thu) iyarriya thoompotu surukkik / Kaavil thakaiththa thuraikootu kalappaiyar / Kaival ilaiyar katavul pazhissa / Marappulik kuzhooukkural seththu vayakkaliru / Varaisaer(pu) ezhuntha sutarvee vaengkaip / Poovutaip perunjinai vaangkip pilanthuthan / Maairunj senni anipera milaissis / Saeer urra selpatai maravar / Than(tu)utai valaththar poarethirn thaangku / Vazhaiamal viyankaatu silampap pilirum / Mazhaipeyal maariya kazhaithirang(ku) aththam / On(ru)iran(tu) alapala kazhinthu thinthaer / Vasaiil netunthakai kaankuvan thisinae / Thaaval uyyumoa marrae thaavaathu / Vanjinam mutiththa onrumozhi maravar / Mura(su)utaip perunjamath(thu) arasupatak katanthu / Vevvar oassam perukath thevvar / Mila(ku)eri ulakkaiyin irunthalai itiththu / Vai(ku)aarp(pu) ezhuntha maipatu parappin / Etuththae(ru) aeya katip(pu)utai viyankan / Valampatu seerththi orung(ku)utan iyainthu / Kaalulaik katumpisir utaiya vaalulaik / Katumparip puravi oornthanin / Patunthiraip panikkatal uzhantha thaalae. / Senthuraip paataanpaattu

பகிர்
கதை

சுடர்வீவேங்கை

ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · காட்சி வாழ்த்து