தசும்புதுளங்(கு) இருக்கை
ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · செந்துறைப் பாடாண்பாட்டு
இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசிநெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லதுதும்பை சூடாது மலைந்த மாட்சிஅன்னோர் பெரும நல்நுதல் கணவஅண்ணல் யானை அடுபோர்க் குட்டுவமைந்(து)உடை நல்அமர்க் கடந்து வலம்தாணஇஇஞ்சிவீ விராய பைந்தார் சூட்டிச்சாந்துபுறத்(து) எறித்த தசும்புதுளங்(கு) இருக்கைத்தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்துகோடியர் பெரும்கிளை வாழ ஆ(டு)இயல்உளைஅவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்மன்பதை மருள அரசுபடக் கடந்துமுந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்ஒளிறுநிலை உயர்மருப்(பு) ஏந்திய களி(று)ஊர்ந்துமான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்தேரொடு சுற்றம் உல(கு)உடன் மூயமாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்துவெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்தண்பல வரூஉம் புணாயின் பலவே.
ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · செந்துறைப் பாடாண்பாட்டு