நோய்தபு நோன்தொடை
ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · செந்துறைப் பாடாண்பாட்டு
நிலம்புடைப்(பு) அன்னஆர்ப் பொடுவிசும்பு துடையூவான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்றஅரிய என்னா(து) ஓம்பாது வீசிக்கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்களை(க)என அறியாக் கச(டு)இல் நெஞ்சத்(து)ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் காணியர்காணி லியரோநின் புகழ்ந்த யாக்கைமுழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடைநுண்கொடி உழிஞை வெல்போர் அறுகைசேணன் ஆயினும் கேள்என மொழிந்துபுலம்பெயர்ந்(து) ஒளித்த களையாப் பூசற்(கு)அரண்கடா உறீஇ அணங்குநிகழ்ந் தன்னமோகூர் மன்னன் முரசம் கொண்டுநெடுமொழி பணித்(து)அவன் வேம்புமுதல் தடிந்துமுரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டிஒழுகை உய்த்த கொழுஇல் பைந்துணிவைத்தலை மறந்த துய்த்தலைக் கூகைகவலை கவற்றும் குராலம் பறந்தலைமுர(சு)டைத் தாயத்(து) அரசுபல ஓட்டித்துளங்குநீர் வியல்அகம் ஆண்(டு)இனிது கழிந்தமன்னர் மறைத்த தாழிவன்னி மன்றத்து விளங்கிய நாடே.
ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · செந்துறைப் பாடாண்பாட்டு