பாடல் 58 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 58 · ஏவிளங்கு தடக்கை

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்வெண்தோட்(டு) அசைத்த ஒண்பூங் குவளையர்வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்செல்உறழ் மறவர்தம் கொல்படைத் தாணஇயர்இன்(று)இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளைமண்புனை இஞ்சி மதில்கடந்(து) அல்ல(து)உண்குவம் அல்லேம் புகாஎனக் கூறிக்கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்பொய்படு(பு) அறியா வயங்குசெந் நாவின்எயில்எறி வல்வில் ஏவிளங்கு தடக்கைஏந்(து)எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறைவான வரம்பன் என்ப கானத்துக்கறங்(கு)இசைச் சிதடி பொரிஅரைப் பொருந்தியசிறிஇலை வேலம் பெரிய தோன்றும்புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்சீர்உடைப் பல்பக(டு) ஒலிப்பப் பூட்டிநாஞ்சில் அடிய கொழுவழி மருங்கின்அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.
பகிர்
கதை

ஏவிளங்கு தடக்கை

ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · செந்துறைப்பாடாண்பாட்டு