பாடல் 43 · கலித்தொகை · ஐம்புலவர்

கலித்தொகை 43 · குறிஞ்சி · கபிலர்

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்துஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்றமை படு சென்னிப் பய மலை நாடனைத்தையலாய்! பாடுவாம் நாம்;தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள்முகையின் மேல் தும்பி இருக்கும் - பகை எனின்,கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்தோற்றலை நாணாதோன் குன்று;வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்வருடைமான் குழவிய வள மலை நாடனைத்தெருளத் தெரி இழாய்! - நீ ஒன்று பாடித்தை;நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே -மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர் குற்றம்கூறுதல் தேற்றாதோன் குன்று;புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்டபுணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை -மணம் நாறு கதுப்பினாய்! - மறுத்து ஒன்று பாடித்தை;கடும் கண் உழுவை அடி போல வாழைக்கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் - இடும்பையால்இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால்,தன் மெய் துறப்பான் மலை;என ஆங்கு,கூடி அவர் திறம் பாட, என் தோழிக்குவாடிய மென் தோளும் வீங்கின -ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே!
பகிர்
கதை

குறிஞ்சி · கபிலர்

இரண்டாவது பகுதி · குறிஞ்சி · கபிலர் பாடியது