குறிஞ்சி · கபிலர்
இரண்டாவது பகுதி · குறிஞ்சி · கபிலர் பாடியது
மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்தமுறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக்கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன்மறந்தான்; மறக்க; இனி, எல்லா! நமக்குச்சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன் திறம்கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்.வள்ளை அகவுவம் வா, இகுளை! நாம்வள்ளை அகவுவம், வா;காணிய வா - வாழி தோழி! - வரைத் தாழ்பு -வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளாநாண் இலி நாட்டு மலை;ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்அறம் புரி நெஞ்சத்தவன்?தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக்கொன்னாளன் நாட்டு மலை;கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலைநீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்தேர் ஈயும் வண் கையவன்;வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழஎவ்வம் உறீஇயினான் குன்று;எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி -அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்நெஞ்சம் பிணிக்கொண்டவன்!என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்;தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச்,சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர,ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்ஆய் இழை மேனிப் பசப்பு.
இரண்டாவது பகுதி · குறிஞ்சி · கபிலர் பாடியது