பாடல் 21 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 21 · பாலை · காவன் முல்லைப் பூதனார்

மனையிள நொச்சி மௌவல் வான்முகைத்துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பலவ்வயிற் றகன்ற வல்குற் றைஇத்தாழ்மென் கூந்தற் றடமென் பணைத்தோண்மடந்தை மாணலம் புலம்பச் சேய்நாட்டுச்செல்ல லென்றியான் சொல்லவு மொல்லாய்வினைநயந் தமைந்தனை யாயின் மனைநகப்பல்வேறு வெறுக்கை தருகம் வல்லேயெழுவினி வாழியெ னெஞ்சே புரியிணர்மெல்லவி ழஞ்சினை புலம்ப வல்லோன்கோடறை கொம்பின் வீயுகத் தீண்டிமராஅ மலைத்த மணவாய்த் தென்றல்சுரஞ்சென் மள்ளர் சுரியற் றூற்றுமென்றூழ் நின்ற புன்றலை வைப்பிற்பருந்திளைப் படூஉம் பாறுதலை யோமையிருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்டமென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கட்செந்நா யேற்றை கேழ றாக்கவிரியற் பிணவ றீண்டலிற் பரீஇச்செங்கா யுதிர்ந்த பைங்குலை ஈந்தின்பரன்மட் சுவல முரணில முடைத்தவல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவலரூறா திட்ட வுவலைக் கூவல்வெண்கோடு நயந்த வன்பில் கானவரிகழ்ந்தியங் கியவி னகழ்ந்த குழிசெத்திருங்களிற் றினநிரை தூர்க்கும்பெருங்க லத்தம் விலங்கிய காடே.

Manaiyila nossi mauval vaanmukaith / Thunainiraith thanna maaveezh venpa / Lavvayir rakanra valkur raiith / Thaazhmen koonthar ratamen panaiththoan / Matanthai maanalam pulampas saeynaattus / Sella lenriyaan sollavu mollaay / Vinainayan thamainthanai yaayin manainakap / Palvaeru verukkai tharukam vallae / Yezhuvini vaazhiye nenjae puriyinar / Mellavi zhanjinai pulampa valloan / Koatarai kompin veeyukath theenti / Maraaa malaiththa manavaayth thenral / Suranjen mallar suriyar roorru / Menroozh ninra punralai vaippir / Parunthilaip patooum paaruthalai yoamai / Yirungkal vitarakath theenrilaip patta / Menpunir rampinavu pasiththenap paingkat / Sennaa yaerrai kaezha raakka / Viriyar pinava reentalir pareeis / Sengkaa yuthirntha paingkulai eenthin / Paranmat suvala muranila mutaiththa / Valvaayk kanissik koozhaar koovala / Rooraa thitta vuvalaik kooval / Venkoatu nayantha vanpil kaanava / Rikazhnthiyang kiyavi nakazhntha kuzhiseth / Thirungkalir rinanirai thoorkkum / Perungka laththam vilangkiya kaatae.

பகிர்
கதை

பாலை · காவன் முல்லைப் பூதனார்

பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. · காவன் முல்லைப் பூதனார் பாடியது