பாடல் 179 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 179 · பாலை · கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்வெண்தேர் ஓடுங் கடங்காய் மருங்கில்துனையெரி பரந்த துன்னரும் வியன்காட்டுச்சிறுகண் யானை நெடுங்கை நீட்டிவான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅதுகான்புலந்து கழியுங் கண்ணகன் பரப்பின்விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்நல்நிலை பொறித்த கல்நிலை அதரஅரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச்சுரஞ்செல விரும்பினி ராயின் இன்நகைமுருந்தெனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்க்குவளை நாள்மலர் புரையும் உண்கண்இம்மதியேர் 3வாள்நுதல் புலம்பப்பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே.
பகிர்
கதை

பாலை · கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

பிரிவுணர்த்தியதலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. · கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் பாடியது