பாடல் 277 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 277 · பாலை · – கருவூர் நன்மார்பனார்

தண்கதிர் மண்டிலம் அவிரறச் சாஅய்ப்பகலழி தோற்றம் போலப் பையெனநுதலொளி கரப்பவும் ஆள்வினை தருமார்கவலில் உள்ளமொடு எஃகுதுணை யாகக்கடையலங் குரல வாள்வரி உழுவைபேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாதுஇரும்பனஞ் 3செறும்பின் அன்ன பரூஉமயிர்ச்சிறுகட் பன்றி வருதிறம் பார்க்கும்அத்தமார் அழுவத் தாங்கண் நனந்தலைப்பொத்துடை மரத்த புகர்படு நீழல்ஆறுசெல் வம்பலர் 4அசையுந ரிருக்கும்ஈரமில் வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின்வாரா அளவை ஆயிழை கூர்வாய்அழலகைந் தன்ன காமர் துதைமயிர்மனையுறை கோழி மறனுடைச் சேவல்போர்புரி யெருத்தம் போலக் கஞலியபொங்கழல் முருக்கின் ஒண்குரல் மாந்திச்சிதர்சிதர்ந் துகுத்த செவ்வி வேனில்வந்தன்று அம்ம தானேவாரார் தோழிநங் காத லோரே.

Thankathir mantilam aviraras saaayp / Pakalazhi thoarram poalap paiyena / Nuthaloli karappavum aalvinai tharumaar / Kavalil ullamotu eஃkuthunai yaakak / Kataiyalang kurala vaalvari uzhuvai / Paezhvaayp pinavin vizhuppasi noanaathu / Irumpananj 3serumpin anna parooumayirs / Sirukat panri varuthiram paarkkum / Aththamaar azhuvath thaangkan nananthalaip / Poththutai maraththa pukarpatu neezhal / Aarusel vampalar 4asaiyuna rirukkum / Eeramil venjuram iranthoar namvayin / Vaaraa alavai aayizhai koorvaay / Azhalakain thanna kaamar thuthaimayir / Manaiyurai koazhi maranutais saeval / Poarpuri yeruththam poalak kanjaliya / Pongkazhal murukkin onkural maanthis / Sitharsitharn thukuththa sevvi vaenil / Vanthanru amma thaanae / Vaaraar thoazhinang kaatha loarae.

பகிர்
கதை

பாலை · - கருவூர் நன்மார்பனார்

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குப் பருவங்கண் டழிந்து சொல்லியது. · - கருவூர் நன்மார்பனார் பாடியது