குறிஞ்சி · கபிலர்
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. · கபிலர் பாடியது
குணகடன் முகந்த கொள்ளை வானம்பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்தோல்நிரைத் தனைய வாகி வலனேர்புகோல்நிமிர் கொடியின் வசிபட மின்னிபெருமலை மீமிசை முற்றின வாயின்வாளிலங் கருவி தாஅய் நாளைஇருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டிவருவது மாதோ வண்பரி யுந்திநனிபெரும் பரப்பின் நம்மூர் முன்துறைப்பனிபொரு மழைக்கண் 2சிவப்பப் பானாள்முனிபடர் அகல மூழ்குவங் கொல்லோமணிமருண் மேனி யாய்நலந் தொலையத்தணிவருந் துயரஞ் செய்தோன்அணிகிளர் நெடுவரை யாடிய நீரே.
Kunakatan mukantha kollai vaanam / Panaikezhu vaenthar palpataith thaanaith / Thoalniraith thanaiya vaaki valanaerpu / Koalnimir kotiyin vasipata minni / Perumalai meemisai murrina vaayin / Vaalilang karuvi thaaay naalai / Iruvethir amkazhai osiyath theenti / Varuvathu maathoa vanpari yunthi / Naniperum parappin nammoor munthuraip / Paniporu mazhaikkan 2sivappap paanaal / Munipatar akala moozhkuvang kolloa / Manimarun maeni yaaynalan tholaiyath / Thanivarun thuyaranj seythoan / Anikilar netuvarai yaatiya neerae.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. · கபிலர் பாடியது