பாலை · மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் 1மள்ளனார்
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருண்முற்றி வந்திருந்த காலத்து மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் 1மள்ளனார் பாடியது
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ பிரியினும்கேளினி வாழிய நெஞ்சே நாளும்கனவுக்கழிந் தனைய வாகி நனவின்நாளது செலவும் மூப்பினது வரவும்அரிதுபெறு சிறப்பிற் காமத் தியற்கையும்இந்நிலை அறியா யாயினுஞ் செந்நிலைஅமையா டங்கழை தீண்டிக் கல்லெனஞெமையிலை உதிர்த்த எரிவாய்க் கோடைநெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்கடுவெயில் திருகிய வேனில் வெங்காட்டுஅறுகோட் டெழிற்கலை அறுகயம் நோக்கித்தெண்ணீர் வேட்ட சிறுமையிற் றழைமறநதுமாநிழல் அற்ற இயவிற் சுரனிறந்துவிருந்தொழ வறியாப் பெருந்தண் பந்தர்வருந்தி வருநர் ஒம்பித் தண்ணெனத்தாதுதுகள் உதிர்த்த தாழையங் கூந்தல்வீழிதழ அலரி மெல்லகஞ் சேர்த்திமகிழணி முறுவல் மாண்ட சேக்கைநம்மொடு நன்மொழ நவிலும்பொம்மல் ஓதிப் புனையிழை குணனே.
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருண்முற்றி வந்திருந்த காலத்து மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் 1மள்ளனார் பாடியது