பாடல் 10 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 10 · குற்றமும் தண்டனையும் · ஊன் பொதி பசுங் குடையார்

வழிபடு வோரை வல்லறி தீயே!பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;நீமெய் கண்ட தீமை காணின்,ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கைமகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,நெய்தருங் கானல் நெடியோய்!எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!
பகிர்
கதை

குற்றமும் தண்டனையும் · ஊன் பொதி பசுங் குடையார்

திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி