பாடல் 13 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 13 · நோயின்றிச் செல்க · உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே,புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,மறலி அன்ன களிற்றுமிசை யோனே;களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!பழன மஞ்ஞை உகுத்த பீலிகழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,கொழுமீன், விளைந்த கள்ளின்,விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
பகிர்
கதை

நோயின்றிச் செல்க · உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

திணை: பாடாண் · துறை: வாழ்த்தியல் · பாடப்பட்டோன்: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி