பாடல் 75 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 75 · அரச பாரம் · சோழன் நலங்கிள்ளி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,பால்தர வந்த பழவிறல் தாயம்எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு எனகுடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடைஎன்றூழ் வாடுவறல் போல, நன்றும்நொய்தால் அம்ம தானே-மையற்று,விசும்புஉற ஓங்கிய வெண்குடைமுரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,
பகிர்
கதை

அரச பாரம் · சோழன் நலங்கிள்ளி

திணை: பொதுவியல் · துறை: பொருண்மொழிக் காஞ்சி