பாடல் 396 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 396 · பாடல்சால் வளன் · மாங்குடி கிழார்

கீழ் நீரால் மீன் வழங்குந்து;மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;கழி சுற்றிய விளை கழனி,அரிப் பறையாற் புள் ளோப்புந்து;நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்மென் பறையாற் புள் இரியுந்து;நனைக் கள்ளின் மனைக் கோசர்தீந் தேறல் நறவு மகிழ்ந்துதீங் குரவைக் கொளைத்தாங் குந்து;உள்ளி லோர்க்கு வலியா குவன்,கேளி லோர்க்குக் கேளா குவன்கழுமிய வென்வேல் வேளே;வளநீர் வாட்டாற்று எழினி யாதன்கிணை யேம், பெரும!கொழுந் தடிய சூடு என்கோ?வளநனையின் மட்டு என்கோ?குறு முயலின் நிணம் பெய்தந்தநறுநெய்ய சோறு என்கோ?திறந்து மறந்து கூட்டு முதல்முகந்து கொள்ளும் உணவு என்கோ?அன்னவை பலபல . . .. . . . வருந்தியஇரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சியஅளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே;மாரி வானத்து மீன் நாப்பண்,விரி கதிர வெண் திங்களின்,விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை!யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்நிரைசால் நன்கலன் நல்கி,உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!

Keezh neeraal meen vazhangkunthu; / Meeneeraan, kannanna, malarpook kunthu; / Kazhi surriya vilai kazhani, / Arip paraiyaar pul loappunthu; / Netuneer thokooum manal thankaan / Men paraiyaar pul iriyunthu; / Nanaik kallin manaik koasar / Theen thaeral naravu makizhnthu / Theeng kuravaik kolaiththaang kunthu; / Ulli loarkku valiyaa kuvan, / Kaeli loarkkuk kaelaa kuvan / Kazhumiya venvael vaelae; / Valaneer vaattaarru ezhini yaathan / Kinai yaem, peruma! / Kozhun thatiya sootu enkoa? / Valananaiyin mattu enkoa? / Kuru muyalin ninam peythantha / Naruneyya soaru enkoa? / Thiranthu maranthu koottu muthal / Mukanthu kollum unavu enkoa? / Annavai palapala . . . / . . . . varunthiya / Irumpaer okkal arunthi enjiya / Aliththu uvappa, eeththoan enthai; / Emmoar aakkak kangku untae; / Maari vaanaththu meen naappan, / Viri kathira ven thingkalin, / Vilangkith thoanruka, avan kalangkaa nallisai! / Yaamum pirarum vaazhththa, naalum / Niraisaal nankalan nalki, / Uraiselas surakka avan paatalsaal valanae!

பகிர்
கதை

பாடல்சால் வளன் · மாங்குடி கிழார்

திணை: பாடாண் · துறை: கடைநிலை · பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்