புரத்தல் வல்லன் · ஔவையார்
திணை: பாடாண் · துறை: விறலியாற்றுப்படை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!செல்வை யாயின், சேணோன் அல்லன்;முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகைமலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி;பொழுது இடைப் படாஅப் புலரா மண்டைமெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப,வறத்தற் காலை யாயினும்,புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!
Oruthalaip pathalai thoongka, oruthalaith / Thoompuakas sirumuzhaath thoongkath thookkik, / ‘kavizhntha mantai malarkkunar yaar?’ enas / Suranmuthal iruntha silvalai virali! / Selvai yaayin, saenoan allan; / Munaisuta vezhuntha mangkul maappukai / Malaisoozh manjin, mazha kaliru aniyum / Pakaippulath thoanae, pal vael anji; / Pozhuthu itaip pataaap pularaa mantai / Mezhukumel ataiyir kozhuninam peruppa, / Varaththar kaalai yaayinum, / Puraththal vallan; vaazhka, avan thaalae!
திணை: பாடாண் · துறை: விறலியாற்றுப்படை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி