பழநி
பழநி · ராகம் செஞ்சுருட்டி · தாளம் சதுஸ்ர த்ருவம்
தனதனன தத்தான தானான தானதனதனதனன தத்தான தானான தானதனதனதனன தத்தான தானான தானதன ...... தனதானதலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதேதலமிசை யதற்கான பேரோடு கூறியிதுபரிகரி யெனக்காது கேளாது போலுமவர்சரியும்வய துக்கேது தாணர்சொ லீரெனவும் ...... விதியாதேஉலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர்வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரணமுனதடியி னிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்வழிபட எனக்கேத யாவோடு தாளுதவஉரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்அலைகட லடைத்தேம காகோர ராவணனைமணிமுடி துணித்தாவி யேயான ஜானகியைஅடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனேஅறுகினை முடித்தோனை யாதார மானவனைமழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனேபலகலை படித்தோது பாவாணர் நாவிலுறையிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளாபதுமவய லிற்பூக மீதேவ ரால்கள் துயில்வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
பழநி · ராகம் செஞ்சுருட்டி · தாளம் சதுஸ்ர த்ருவம்
பழநி · ராகம் செஞ்சுருட்டி · தாளம் சதுஸ்ர த்ருவம்