Song 49 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 49 · திருச்செந்தூர்

தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானாகுழைக்குஞ்சந் தனச்செங்குங்குமத்தின்சந் தநற்குன்றங்குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலேகுழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலேஉழைக்குஞ்செங் கடத்துன்பன்சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதேஉதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய்தழைக்குங்கொன் றையைச்செம்பொன்சடைக்கண்டங் கியைத்தங்குந்தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார்தனிப்பங்கின் புறத்தின்செம்பரத்தின்பங் கயத்தின்சஞ்சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வேகழைக்குங்குஞ் சரக்கொம்புங்கலைக்கொம்புங் கதித்தென்றுங்கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளேகறுக்குங்கொண் டலிற்பொங்குங்கடற்சங்கங் கொழிக்குஞ்செந்திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே.
Share
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

திருச்செந்தூர்