பாடல் 123 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 123 · பாலை · காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

ஆடாப் படிவத் தான்றோர் போலவரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லுங்கான யானை கவினழி குன்றம்இறந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்தசில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்திஒழியின் வறுமை யஞ்சுதி அழிதகநெய்கனி நெடுவேல் எஃகிலை யிமைக்கும்மழைமருள் பஃறோல் மாவண் சோழர்கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறைஇறவொடு வந்து கோதையொடு பெயரும்பெருங்கட லோதம் போலஒன்றில் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே.
பகிர்
கதை

பாலை · காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது