நெய்தல் · நக்கீரர்
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. · நக்கீரர் பாடியது
பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்துபுன்னையம் பொதும்பின் இன்னிழற் கழிப்பிமாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்துவலவன் வண்டேர் இயக்க நீயும்செலவுவுருப் புறுதல் ஒழிகதில் அம்மசெல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன்பல்பூங் கானற் பவத்திரி அனவிவள்நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக்கழியே ஓதம் மல்கின்று வழியேவள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்கும்சென்றோர் மன்ற மான்றின்று பொழுதெனநின்றிறத் தவலம் வீட இன்றிவண்சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்பபசுமீன் நொடுத்த 2வெண்ணெல்மாத் தயிர்மிதிமிதவை மாவார் குநவே நினக்கேவடவர் தந்த வான்கேழ் வட்டம்குடபுல உறுப்பிற் கூட்டுபு நிகழ்த்தியவண்டிமிர் 4நறுஞ்சாந் தகுவம் திண்டிமல்எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர்கூர்வளிக் 5கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன்கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலைதண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டுமுன்றிற் றாழைத் தூங்கும்தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே.
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. · நக்கீரர் பாடியது