பாடல் 62 · கலித்தொகை · ஐம்புலவர்

கலித்தொகை 62 · குறிஞ்சி · கபிலர்

ஏஎ! இ·து ஒத்தன், நாண் இலன் - தன்னொடுமேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்;மேவினும், மேவாக்கடையும் அ·து எல்லாம்நீ அறிதி; யான் அ·து அறிகல்லேன்; பூ அமன்றமெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்புல் இனிது ஆகலின், புல்லினென்; - எல்லா!தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னாசெய்வது நன்று ஆமோ மற்று?சுடர் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றக் கேள்வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்றுஉண்பவோ, நீர் உண்பவர்?செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ -ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரைவௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று;அறனும் அது கண்டற்று ஆயின், திறன் இன்றிக்கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடுமாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?
பகிர்
கதை

குறிஞ்சி · கபிலர்

இரண்டாவது பகுதி · குறிஞ்சி · கபிலர் பாடியது