பாடல் 82 · கலித்தொகை · ஐம்புலவர்

கலித்தொகை 82 · மருதக்கலி · மருதநிலங்கன்

ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்புகாலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலைபாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடுபுக்க வழி எல்லாம் கூறு;கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்காயாமை வேண்டுவல் யான்;காயேம்;மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்அடக்கம் இல் போழ்தின் கண், தந்தை காமுற்றதொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு, அவளும்மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து -'பெருமான்! நகை முகம் காட்டு' என்பாள், கண்ணீர்சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு, அவளும்மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,ஆங்கே, 'அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும்பெருமான் பரத்தைமை ஒவ்வாத' என்றாள்;அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித்தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்புலத் தகை புத்தேள் இல் புக்கான்- அலைக்கு ஒருகோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? - எல்லா!வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும்; கொண்டாங்கேதொடியும் உகிரும் படை ஆக நுந்தைகடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,வடுவும் குறித்தாங்கே செய்யும்; விடு, இனி;அன்ன பிறவும், பெருமான் அவள் வயின்துன்னுதல் ஓம்பித், திறவது இல் முன்னி, நீஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;அமைந்தது; இனி நின் தொழில்.
பகிர்
கதை

மருதக்கலி · மருதநிலங்கன்

மூன்றாவது பகுதி · மருதக்கலி · மருதநிலங்கன் பாடியது