பாடல் 81 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 81 · நிழல்விடு கட்டி

உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்துகடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்துகாலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக்களிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்கஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்பஅரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் தி஡஢ந்துவாயில் கொள்ளா மைந்தினர் வயவர்மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்கெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்இடாஅ ஏணி வியல்அறைக் கொட்பநா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றிஅழல்வினை அமைந்த நிழல்விடு கட்டிகட்டளை வலிப்பநின் தானை உதவிவேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்முழவின் அமைந்த பெரும்பழம் இசைந்துசா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த்தூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்கலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்சுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்துமின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்தன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்துமாண்இழை அரிவை காணிய ஒருநாள்பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்முனைகை விட்டு முன்னிலைச் செல்லாதுதூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடுதொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டுதுஞ்சா வேந்தரும் துஞ்சுகவிருந்தும் ஆக நின்பெருந் தோட்கே.
பகிர்
கதை

நிழல்விடு கட்டி

ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · முல்லை