வினைநவில் யானை
ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · முல்லை
பகைபெரு மையின் தெய்வம் செப்பஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்செல்சமம் தொலைத்த வினைநவில் யானைகடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்திவண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயலமறவர் மறல மாப்படை உறுப்பத்தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கைஇன்ன வைகல் பல்நாள் ஆகப்பாடிக் காண்கு வந்திசின் பெருமபாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்புகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசைநிலம்தரு திருவின் நெடியோய் நின்னே.
Pakaiperu maiyin theyvam seppa / Aarirai anjaa veruvaru kattoorp / Palkoti nutangkum munpin serunar / Selsamam tholaiththa vinainavil yaanai / Kataaam vaarnthu katumsinam poththi / Vantupatu senniya pitipunarn(thu) iyala / Maravar marala maappatai uruppath / Thaerkoti nutangkath thoalputai aarppak / Kaatukai kaayththiya neetunaal irukkai / Inna vaikal palnaal aakap / Paatik kaanku vanthisin peruma / Paatunar, kolakkolak kuraiyaas selvaththus serroar / Kolakkolak kuraiyaath thaanais saanroar / Vanmaiyum semmaiyum saalpum maranum / Pukanrupukazhn(thu) asaiyaa nallisai / Nilamtharu thiruvin netiyoay ninnae.
ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · முல்லை