பஃறோல் தொழுதி
ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · தும்பையரவம்
கார்மழை முன்பின் கைபரிந்(து) எழுதரும்வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக்கொல்களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடுநெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்துசெலவுபெரி(து) இனிதுநின் காணு மோர்க்கேஇன்னா(தூ) அம்மஅது தானே பல்மாநாடுகெட எருக்கி நன்கலம் தரூஉம்நின்போர்அருங் கடும்சினம் எதிர்ந்துமாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே.
Kaarmazhai munpin kaiparin(thu) ezhutharum / Vaanparaik kurukin netuvari porpak / Kolkaliru mitaintha paஃroal thozhuthiyotu / Netunthaer nutangkukoti avirvarap polinthu / Selavuperi(thu) inithunin kaanu moarkkae / Innaa(thoo) ammaathu thaanae palmaa / Naatuketa erukki nankalam tharooumnin / Poararung katumsinam ethirnthu / Maarukol vaenthar paasarai yoarkkae.
ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · தும்பையரவம்