பாடல் 88 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 88 · கல்கால் கவணை

வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாதுகடவுள் பெயரிய கானமொடு கல்உயர்ந்துதெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு)அணங்(கு)உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்துபொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்றுநாம மன்னர் துணிய நூறிக்கால்வல் புரவி அண்டர் ஓட்டிச்சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக்குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)உருகெழு மரபின் அயிரை பரைஇவேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்கொற்றம் எய்திய பெரியோர் மருகவியல்உளை அரிமான் மறம்கெழு குருசில்விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறைஆர்எயில் அலைத்த கல்கால் கவணைநார்அரி நறவின் கொங்கர் கோவேஉடலுநர்த் தபுத்த பொலம்தேர்க் குருசில்வளைகடல் முழவின் தொண்டியோர் பொருநநீநீடு வாழிய பெரும நின்வயின்துவைத்த தும்பை நனவுற்று வினவும்மாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னியபுனல்மலி பேரியா(று) இழிதந் தாங்குவருநர் வரையாச் செழும்பல் தாரம்கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்பஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்பாவை அன்ன மகளிர் நாப்பண்புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடுதண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்துதிருவில் குலைஇத் திருமணி புரையும்உருகெழு கருவிய பெருமழை சேர்ந்துவேங்கை வி஡஢ந்து விசும்(பு)உறு சேட்சிமைஅருவி அருவரை அன்ன மார்பின்சேண்நாறு நல்இசைச் சேயிழை கணவமாகம் சுடர மாவிசும்(பு) உகக்கும்ஞாயிறு போல விளங்குதி பல்நாள்ஈங்குக் காண்கு வந்தனென் யானேஉறுகால் எடுத்த ஓங்குவரல் புணரிநுண்மணல் அடைகரை உடைதரும்தண்கடல் படப்பை நாடுகிழ வோயே.
பகிர்
கதை

கல்கால் கவணை

ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப்பாடாண்பாட்டு