பாடல் 89 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 89 · துவராக் கூந்தல்

வானம் பொழுதொடு சுரப்பக் கானம்தோ(டு)உறு மடமான் ஏறுபுணர்ந்(து) இயலப்புள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்பழனும் கிழங்கும் மிசைஅற(வு) அறியாதுபல்ஆன் நல்நிரை புல்அருந்(து) உகளப்பயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்பெரும்பல் யாணர்க் கூலம் கெழுமநன்பல் ஊழி நடுவுநின்(று) ஒழுகப்பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின்நாளின் நாளின் நாடுதொழு(து) ஏத்தஉயர்நிலை உலகத் (து) உயர்ந்தோர் பரவஅரசியல் பிழையாது செருமேம் தோன்றிநோய்இலை ஆகியர் நீயே நின்மாட்(டு)அடங்கிய நெஞ்சம் புகர்படு(பு) அறியாதுகனவினும் பிரியா உறையுளொடு தண்எனத்தகரம் நீவிய துவராக் கூந்தல்வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்துவாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்துமீனொடு புரையும் கற்பின்வாள்நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே.

Vaanam pozhuthotu surappak kaanam / Thoa(tu)uru matamaan aerupunarn(thu) iyalap / Pullum minjirum maassinai aarppap / Pazhanum kizhangkum misaiara(vu) ariyaathu / Palaan nalnirai pularun(thu) ukalap / Payamkatai ariyaa valamkezhu sirappin / Perumpal yaanark koolam kezhuma / Nanpal oozhi natuvunin(ru) ozhukap / Palvael irumporai ninkoal semmaiyin / Naalin naalin naatuthozhu(thu) aeththa / Uyarnilai ulakath (thu) uyarnthoar parava / Arasiyal pizhaiyaathu serumaem thoanri / Noayilai aakiyar neeyae ninmaat(tu) / Atangkiya nenjam pukarpatu(pu) ariyaathu / Kanavinum piriyaa uraiyulotu thanenath / Thakaram neeviya thuvaraak koonthal / Vathuvai makalir noakkinar peyarnthu / Vaazhnaal ariyum vayangkusutar noakkaththu / Meenotu puraiyum karpin / Vaalnuthal arivaiyotu kaanvarap polinthae.

பகிர்
கதை

துவராக் கூந்தல்

ஒன்பதாம் பத்து · பெருங்குன்றூர்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை · காவல்முல்லை