பாடல் 129 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 129 · வேங்கை முன்றில் · உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,வேங்கை முன்றில் குரவை அயரும்,தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்;ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று,வானம் மீன்பல பூப்பின், ஆனாதுஒருவழிக் கருவழி யின்றிப்பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே.
பகிர்
கதை

வேங்கை முன்றில் · உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

திணை: பாடாண் · துறை: இயன் மொழி. சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல் · பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்